தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இவை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
பெட்ரோல் பங்குகள் காலை 6 மணிமுதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும். அதே சமயம் அரசு வாகனங்கள், அவசர பணி ஊர்திகள் போன்றவற்றுக்கு தனியாக பெட்ரோல் பங்குகள் முழு நேரமும் இயங்கும்.
அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை விற்பனை செய்யும் கோயம்பேடு சந்தை உட்பட அனைத்து கடைகளும் 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும்.
ஆனாலும் மருந்து கடைகள், பார்சல் மட்டும் வழங்கும் உணவகங்கள் முழுநாளும் செயல்பட தடையில்லை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க ஸ்விகி, ஸோமோட்டோ, ஊபர் ஈட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை விநியோகிக்கும் செயலிகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
காலை மதியம் இரவு என மூன்று வேளையும், நேரக் கட்டுப்பாடுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.