ஊரடங்கை அடுத்து அத்தியாவசியப் பொருட்கள் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் பாஸ் வழங்குவதகு அதிகாரம் பெற்ற அதிகாரிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் தனி உதவியாளர்கள் சென்னை மாநகராட்சியின் பணிகள் துணை ஆணையர் ஆகியோர் பாஸ்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள், சிறுதொழில் துறையின் சென்னை மண்டல இணை இயக்குநர் ஆகியோரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையரின் ஒப்புதலோடு பாஸ்களை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சார் ஆட்சியர், வருவாய் மாவட்ட அதிகாரி ஆகியோரும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு தங்கள் அதிகாரத்துக்குட்பட்ட பகுதிகளில் பாஸ் வழங்கலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.