தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக 8,795 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 903 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சேலம், தர்மபுரி, நீலகிரி, மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் விதிமீறல் தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
அதே போல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறிய குற்றத்திற்காக 7 ஆயிரத்து 119 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபட்டது தொடர்பாக 5 ஆயிரத்து 501 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகபட்ச விதிமீறல் வழக்குகளும், கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாகனங்களும் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.