கொரோனா தொடர்பாக முதலமைச்சர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் சிரமங்கள் உள்ளதாகவும், கொரோனா குறித்துப் பரப்பப்படும் தகவல்களால் மக்கள் பதற்றம் அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எத்தனை நாளைக்கு முறையான வருமானமின்றி செய்யும் தொழிலை இழந்து அவதி என அனைவரும் அச்சமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனிமை வாழ்க்கையில் மக்களின் சிரமங்களை அறிந்து உடனுக்குடன் தீர்வு காண்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிடமுடியாது என்றும் அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் என்றும் கூறியுள்ள அவர், ஊரடங்கால் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருந்தால் வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.