தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கோரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துரையினர் ஈடுபட்டனர்.
சென்னை மாதவரம் பகுதியில் சுகாதாரதுறை மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து தீயணைப்பு வாகனம் மூலம், லைசால் கலந்த கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தனர்.
3 ஆவது நாளாக தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டமங்கலம் கிராமத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.
அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், வீதிவீதியாக சென்று கதவு மற்றும் கை படக்கூடிய அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சாலைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் மோட்டார் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனை முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.