வரி செலுத்துவோர் கடந்த 10 ஆண்டுகளில் செலுத்திய வரித்தொகையில் 25 சதவீதத்தை அரசு அவர்களுக்கு திருப்பி தர வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள மிக பெரிய பொருளாதார சரிவால், சிறு லாபத்துடன் செயல்பட்டு வந்த தொழிற்சாலைகளையும் நிறுவனங்களையும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில் 10 ஆண்டுகளாக செலுத்திய வருமானவரியில் 25 சதவீதத்தை கார்பரேட் நிறுவனங்களை விடுத்து மற்ற நிறுவனங்களுக்கும் தனிநபருக்கும் திருப்பி தரும் போது பண புழக்கம் அதிகரிக்கும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.