திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், சிப்காட் தொழிற்பேட்டையில், பழைய கிரீஸ், வாகன எண்ணெய் உள்ளிட்டவற்றை சேமிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
காற்றின் வேகத்தில், கொளுந்துவிட்ட எரிந்த தீயால், அப்பகுதி முழுவதும், கரும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது.
கும்மிடிப்பூண்டி, சிப்காட், தேர்வாய் கண்டிகை உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலமும் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டுவந்தும் நெருப்பை அணைக்கும் பணிகள் 5 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகின்றன.
வெட்டவெளியில் எண்ணெய் பேரல்கள் அடுக்கப்பட்டிருந்ததால், வெயிலின் வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.