கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவை வீழ்த்த மக்கள் தாமாக முன்வந்து சுயதனிமை, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் உள்ள எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 144 தடையால் ஏழை எளிய மக்கள் பாதித்து விடக்கூடாது என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக கவனமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதை மனதில் கொண்டே 3 ஆயிரத்து 280 கோடி ரூபாய் நிவாரண தொகுப்பை முதலமைச்சர் அறிவித்திருப்பதாகவும், பல துறைகளுக்கு போர்க்கால அடிப்படையில் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 560 கோடி ரூபாய் விடுவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அமைச்சர் கூறினார்.