பிரதமரின் அறிவுறுத்தலை ஏற்று, 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்குமாறு தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றியதை தொடர்ந்து, தமிழக ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில், கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள், அரசு கூறிய விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியதோடு, மனித நேயமும், இந்திய தேசமும், கொரோனா வைரஸுக்கு எதிராக தொடுத்துள்ள போரில், தமிழகம் முன்மாதிரியாக திகழ்ந்து, வெற்றியை நோக்கி வழி நடத்த அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.