கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் கடைகளில் எவற்றையெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....
கொரோனா நோய் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பால் பொருட்கள், காய்கறி, பழங்கள் வாங்க வெளியில் வர வேண்டும் என்ற நிலையில், மக்கள் ஆபத்தை உணராமல் கூட்டமாக வந்து கடைகளில் நிற்கின்றனர். சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் பின்பற்ற வேண்டும் என்ற அறிவிப்பு ஒரு சில கடைகளில் மட்டும் ஒரு ஓரமாக ஒட்டி வைக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் ரோந்து வரும் போலீசார் கடைகளில் முறையாக விதிகளை பின்பற்றுகிறார்களா என சோதனையிட்டு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்களையும் வழங்குகின்றனர்