தமிழகத்தில் 144 தடை உத்தரவு - அமல்
தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது
இன்று முதல் ஏப்ரல் 1 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை
சென்னையில் 144 தடை உத்தரவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்தார்
அரசு, தனியார் பேருந்துகள், கால் டேக்சி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி கிடையாது
5 நபர்களுக்கு மேல் ஒரே இடத்தில் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
பால், காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி கடைகள் தொடர்ந்து இயங்கும்
உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி. உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை
பெட்ரோல் பங்குகள், எல்பிஜி கேஸ் நிரப்பும் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்
ஆவின்பால் உள்ளிட்ட அனைத்து பால் பொருட்களும் தடையின்றி கிடைக்கும்
அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது
சென்னை பெருநகரில் காவல் எல்லைகளாக கருதப்படும் இடங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டு மூடல்
டீ கடைகள் திறந்திருக்கும். கூட்டமாக நின்று தேநீர் அருந்த தடை
காய்கறி, மளிகை கடைகளில் வாடிக்கையாளர்கள் 1 மீட்டர் இடைவெளியில் நிற்பது உறுதி செய்யப்பட வேண்டும்
தேவையின்றி வெளியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்
கொரோனா பரவலை தடுக்க வீடுகளில் பொதுமக்கள் தனித்திருத்தல் அவசியம்