சேலத்தில் இந்தோனேஷிய நாட்டை சேர்ந்த 11 பேர் உட்பட 19 பேர் அரசு மருத்தவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேஷியாவில் இருந்து மதப் பிரசாரத்திற்காக வந்த 11 பேர் சேலத்தில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்தனர்.
இதனையறிந்த மருத்துவத்துறை அதிகாரிகள், இந்தோனேசிய நாட்டைச் சேர்ந்த 11 பேர் மற்றும் அவர்களுடன் தங்கியிருந்த சேலத்தைச் சேர்ந்த 8 பேரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இவர்களுக்கு கொரோனாஅறிகுறி இல்லை என்றாலும், இவர்களின் சளி ,ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.