செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

இயல்புநிலைக்கு திரும்பிய தமிழகம்..!

Mar 23, 2020 07:24:58 AM

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்ட 22 மணி நேர மக்கள் ஊரடங்கு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது. சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு சந்தை போன்றவை இயங்குகின்றன.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு முடிந்ததை அடுத்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு மார்ச் 31 வரை பள்ளி- கல்லூரிகள் இயங்காது என அறிவித்தது. பெரு நிறுவனங்கள் மற்றும் பல் பொருள் அங்காடிகளும் இயங்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது. கோவில்கள், பூங்காக்கள், சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை மட்டுப்படுத்த பிரதமர் மோடி நேற்று ஒரு நாள், நாட்டு மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் கட்டுக்கோப்பாக சுய ஊரடங்கை கடைபிடித்தனர்.

இதனை தொடர்ந்து இன்று காலை ஐந்து மணிக்கு பிறகு சிறு சிறு கடைகள், தேனீர் கடைகள் வழக்கம் போல் செயல்பட தொடங்கின. அதிகாலையில் நகர் முழுவதும் பால் விநியோகம் வழக்கம்போல் நடைபெற்றது.

வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காய்கறிகள் சென்னை கோயம்பேட்டில் நள்ளிரவில் லாரிகளில் வந்திறங்கின. வியாபாரிகள் அதிகாலையிலேயே அவற்றை விற்பனைக்காக வாங்கிச் சென்றனர்.

பிற மாநிலம் செல்லும் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டலும், பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய தேவைக்காக தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்கு உள்ளான மாநகர புறநகர் பேருந்துகள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் அதிகாலை ஐந்து மணி முதல் தமிழக அரசு சார்பில் இயக்கக்கூடிய மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.பேருந்துகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னர் பேருந்து பணிமனையில் இருந்து பயணிகள் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் குறைந்து அளவிலான பேருந்துகளே இயக்கப்படுவதால், சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்கள் கிடைக்கும் பேருந்துகளில் முண்டியடித்து ஏறி  செல்கின்றனர். மக்கள் சுய ஊரடங்கு காலை 5 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து வெளியூர் செல்ல, பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் மெல்ல அதிகரித்து வருகிறது.

தனியார் நிறுவனங்கள் பலவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் சமயத்தில், போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 


Advertisement
தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்
கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்
துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர் கைது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாள்
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement