கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசுத்துறையினருக்கு நன்றி தெரிவித்துப் பாரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் வீடுகளில் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
சென்னையில் முதலமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் கலந்து கொண்டார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் இல்லங்களில் கைதட்டி பாராட்டை வெளிப்படுத்தினர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் மக்கள் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
கோவை, சேலம், திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் கொரோனா தடுப்புப் பணிகளில் உள்ளவர்களை கைதட்டிப் பாராட்டினர்
மதுரை, திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கைதட்டும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தேனி, சிவகங்கை, விழுப்புரம், நெல்லை மாவட்ட மக்களும் வீடுகளுக்கு வெளியே ஒருங்கிணைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
தூத்துக்குடி, கடலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகளில் உள்ளவர்களை மக்கள் கைதட்டிப் பாராட்டினர்