காஞ்சிபுரம் கோவிலில் நடக்க இருந்த திருமணம் மக்கள் ஊரடங்கையொட்டி வீட்டிலேயே எளிமையாக நடைபெற்றது.
தமிழ்செல்வி, கவுதம் அசோக் ஜோடி, மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கும் விதமாக முககவசம் அணிந்து தங்கள் வீட்டிலேயே பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர்.
திருமணத்துக்கு வந்த மிகக் குறைந்த அளவு உறவினர்கள், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.