மக்கள் ஊரடங்கின் போது மீனவ சமுதாயத்தினர் அனைத்து விதமான மீன்பிடி தொழில் சார்ந்த நடவடிக்கைகளையும் தவிர்த்திடுமாறு, தமிழக மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பெரு, சிறு மற்றும் சில்லரை வியாபாரிகள் எந்தவிதமான மீன் விற்பனை நடவடிக்கையும் இன்று மேற்கொள்ள வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தங்கு கடல் மற்றும் ஆழ்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள படகுகளிலிருந்து, துறைமுகம் மற்றும் இறங்குதளங்களில் மீன்களை இறக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தில் 1,500 நாட்டுப்பாடகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.