சென்னை மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் மெரீனா உள்பட 4 முக்கிய கடற்கரைகளிலும் பிற்பகல் 3 மணி முதல், பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மெரீனா, பெசன்ட்நகர், திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் இருந்தவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.
பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ள மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், மறு உத்தரவு வரும் வரை, இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.