கொரோனா குறித்த பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு எண் மூலம் தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு 104 மருத்துவ உதவி எண்ணுடன் 044 - 2951 0400 என்ற பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு எண்ணை தமிழக அரசு இணைத்துள்ளது.
இந்த உதவி எண்ணை பயன்படுத்திய பொதுமக்களில் பெரும்பாலோனோர், வெளிநாடு மற்றும் வெளிமாநில பயணங்கள் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாக சேவை மையத்தினர் தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு வர உடல்தகுதி சான்று எதுவும் தேவையில்லை என்றும், கொரோனா அறிகுறியுடன் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே, விமான நிலையம், ரயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல் துறையினரும் இன்ஃப்ரா ரெட் தெர்மாமீட்டர் மூலம் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொரோனா குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக உதவி எண் : 044 - 2951 0400