சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, தேனி, திருநெல்வேலி, திருவாரூர் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐந்தாவதாக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசின் நலவாழ்வுத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சேலம் பரிசோதனை மையம் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் எனவும், மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.