கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட காஞ்சிபுரம் பொறியாளர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் அவருக்கு எந்த பதிப்பும் இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்த பின் செய்தியாளரிகளிடம் பேசிய அவர், தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஸ்டான்லி மருத்துவமனையில் 31 படுக்கை வசதி கொண்ட தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு கொரோனா ஆய்வுக் கூடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் புதிய செயலி மற்றும் விழிப்புணர்வுக் குறும்படம் இன்று மாலை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 31-ஆம் தேதிக்குள் நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்த அவர், எனினும் விடுமுறை நாட்களை நீட்டிப்பது குறித்து காலம் தான் முடிவு செய்யும் என்றார்.