வருகிற 31ஆம் தேதி வரை புதிய ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் பேருந்துகளில் பயணிக்கும் இரண்டரை கோடி பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் பயணத்தைத் தவிர்த்தாலே தொற்று ஏற்படுவதை தடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார். 5 லட்சம் முகக்கவசங்கள் மருத்துவமனைகளில் தயாராக உள்ளது எனவும், மேலும் 25 லட்சம் முகக்கவசங்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.