கொரோனா வதந்தியால் கறிக்கோழி விற்பனை குறைந்து வாரத்துக்கு 15 கோடி ரூபாய் இழப்பும், முட்டை விற்பனை குறைந்து தினசரி 8 கோடி ரூபாய் வரை இழப்பும் ஏற்பட்டுள்ளதாக நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லில் 2 வது நாளாக நடைபெற்ற கோழிப்பண்ணையாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் கோடிக்கணக்கில் தேங்கியுள்ள முட்டைகளை எவ்வாறு விற்பனை செய்வது, அரசிடம் என்ன மாதிரியான உதவிகளை பெறுவது போன்றவை குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முட்டைக் கோழிப்பண்ணையாளர்கள் வர்த்தக சங்க தலைவர் வாங்கிலி சுப்பிரமணி, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்களாலேயே இத்தகைய இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.