கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் உள்ள கட்டமைப்புகள் அதிகபடுத்தப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தில் கொரோனா தொடர்பான சர்வதேச கருத்தரங்கினை தொடங்கி வைத்த அவர், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறுவோர் அதை பரிசோதனை மூலம் நிரூபித்தால், அம்மருந்துக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.