கொரோனா அச்சுறுத்தலால் அவசர வழக்கை மட்டும் விசாரிப்பது தொடர்பாக தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி ஆலோசனை நடத்தினார்.
நோய் பரவலை தடுக்கும்பொருட்டு உச்சநீதிமன்றம் போல் உயர்நீதிமன்றத்திலும் அவசர வழக்குகளை மட்டும் விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் முறையிட்டனர்.
இதனிடையே, உயர் நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு வழக்கறிஞர் முஸ்தஹீன் ராஜா மனு அளித்துள்ளார்.
இது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக தலைமை நீதிபதி சாஹி, மூத்த நீதிபதிகள், தலைமை செயலாளர் சண்முகம்,அரசுத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சுகாதாரத் துறை செயலாளர் பியூலா ராஜேஷ் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.