தமிழ்வழி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அறிமுகம் செய்தார்.
எஸ்.எஸ்.எல்.சி., கல்வித்தகுதியாக உள்ள பணியிடங்களுக்கு ஒன்றாம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும். அதேபோல் 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியாக உள்ள பணியிடங்களுக்கு, 10 மற்றும் 12ஆம் வகுப்பு கல்வியை தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பட்டப்படிப்புக்கான பதவியிடங்களுக்கு, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியிலேயே படித்திருக்க வேண்டும் என்று சட்டத்திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.