கூடங்குளம் அணுமின் நிலையத்தில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள 3 மற்றும் 4-ஆவது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும், தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசிடம் கோரியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய மின் இணைப்பிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக தெரிவித்தார்.
மின் பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழில் தேர்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.