கொரானா, ஒரு நோய் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை, மாலையில் வெளியிட்ட அரசிதழில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக பொது சுகாதாரத்துறையின் 1936 ம் ஆண்டு சட்டத்தின் கீழ், நோய்களுக்கான பட்டியலில் கொரானா சேர்க்கப்பட்டு உள்ளது. இதனை, செய்திக்குறிப்பு ஒன்றின் மூலம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.