திருச்சி மற்றும் திருவண்ணாமலையில் கொரானா பாதிப்பு அறிகுறிகளுடன் 2 பேர் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்த போளூரைச் சேர்ந்த நபர் கொரானா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் திருச்சியிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்ததால் அரசு மருத்துவமனை கொரானா சிறப்பு வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரது எச்சில் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.