கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள மழலையர் வகுப்புகளுக்கும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரைக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மழலையார் வகுப்புகளான ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி., யூ.கே.ஜி (PRE.K.G, LKG, UKG) மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்று கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் LKG, UKG வகுப்புகள் மட்டுமல்லாது 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.