காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த விவகாரத்தில் முழுமையான சட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி விவசாயம் சார்ந்த பொருட்கள் மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு முழுமையாக உள்ளது என்ற அடிப்படையிலேயே இதனை கொண்டு வந்ததாகவும், மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை மத்திய அமைச்சரே தெளிவுபடுத்தியிருப்பதாகவும் கூறினார்.
சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவு எடுத்து டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் தேடித்தேடிப் பார்த்தாலும் எந்த ஓட்டையும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.