கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக, பள்ளி மாணவர்கள் அவ்வப்போது சோப்பினை கொண்டு கைகளை சுத்தம் செய்வதை, தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பில், பள்ளி மாணவர்களுக்குத் தேவையான சோப்புக் கட்டிகளை பள்ளியின் சிறப்பு நிதியிலிருந்தோ அல்லது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ வாங்கி பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட சுய சுகாதாரத்தின் மூலம், கொரானா பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துக் கூற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.