கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெங்களூரை சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம் 635 கோடி ரூபாயில் புதிய தொழிற்சாலை தொடங்க இருப்பதாக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஒசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒசூர் நகரில் செயல்படும் சிப்காட்-2 வளாகத்தில் கடந்த ஓராண்டில் 5 புதிய நிறுவனங்கள் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
2019ல் நடைப்பெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின் பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் பைக் நிறுவனம் 635 கோடி ரூபாய் மதிப்பில் ஒசூரில் புதிதாக தொழிற்சாலையை தொடங்க உள்ளதாகவும், இந்த ஆலை மூலம் 4300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும்க என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.