சேலத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ஈரடுக்கு மேம்பாலப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு ஐந்து ரோடு பகுதியை மையமாக வைத்து புதிதாக இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்ட அரசு சார்பில் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஜூனில் ஏ.வி.ஆர்.சந்திப்பு முதல் ராமகிருஷ்ணா சந்திப்பு வரையிலான பணிகள் முடிவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீதமிருந்த பணிகளும் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில் மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். பாலத்தின் உறுதி உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் சோதனையிட்ட பின்னர், அது திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.