தனியார் நிலங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க தடை விதிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி நிலங்களில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில் காளான் போல பெருகி வரும் விளம்பர பலகைகளை கட்டுப்படுத்தவே சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சி அதிகாரிகளால் கண்காணிக்க இயலவில்லை என்பதற்காக தனியார் நிலங்களில் விளம்பர பலகைகள் வைக்க தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். விளம்பரங்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பாக ஒரு மாதத்தில் விதிகளை கொண்டுவரவும் உத்தரவிட்டனர்.