கோடை விடுமுறையையொட்டித் தாம்பரம் - நாகர்கோவில், நாகர்கோவில் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஏப்ரல் 8 முதல் ஜூலை 1 வரை புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை நாலே முக்கால் மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
ஏப்ரல் 9 முதல் ஜூலை 2 வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்தச் சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.