கும்பகோணம் அருகே கொள்ளை போன 3 சாமி சிலைகளை மீட்ட போலீசார், இதுதொடர்பாக கணவன், மனைவி, மகன் உள்பட 4 பேரை கைது செய்தனர். திருப்புறம்பியம் என்ற இடத்தில் 100 ஆண்டுகள் பழமையான சீனிவாசப் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 8 ஆம் தேதி பெருமாள், தாயார் மற்றும் சேனாதிபதி ஆகிய 3 உலோக சிலைகள் கொள்ளை போனது.
இது தொடர்பாக சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போலீசார், அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரை கைது செய்து அவரது வீட்டில் மறைத்து வைத்திருந்த 3 சிலைகளையும் மீட்டனர். ராமலிங்கத்தின் மனைவி ராசாத்தி, மகன் கமல், மற்றும் மெல்வின் சகாய ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமா? போன்ற பின்னணி குறித்து விசாரித்து வருகின்றனர்.