நாமக்கல்லில் ஒருதலை காதல் விவகாரத்தில் இளம் பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்றதாகக் கூறப்படும் நபரைப் பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
தூசூரைச் சேர்ந்த அந்தப் பெண், சேலம் அம்மாப்பேட்டையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வரும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பூவராகவன் என்பவன் நட்பாகப் பழகியிருக்கிறான். நாளடைவில் காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்தவனை அப்பெண் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர்களான செந்தில் மற்றும் குமார் ஆகியோருடன் நாமக்கல் பேருந்து நிலையம் அருகே வைத்து அப்பெண்ணை ஆட்டோவில் கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. பெண்ணின் கூச்சலைக் கேட்டு அக்கம்பக்கதினர் கூடவே, பூவராகவனும் செந்திலும் தப்பியோடிவிட குமார் மட்டும் சிக்கியிருக்கிறான். அவனை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.