தஞ்சை அருகே தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சக பெண் பேராசிரியையை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கரந்தை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்ராஜ், வல்லம் அடைக்கலமாதா கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் உடன் பணிபுரியும் பெண் பேராசிரியை ஒருவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி அவரோடு தனிமையை கழித்துவிட்டு, ஏமாற்றிவிட்டதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அஸ்வின்ராஜை கைது செய்தனர். பெண் பேராசிரியையுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அஸ்வின்ராஜின் தந்தை செல்வராஜையும் போலீசார் தேடி வருகின்றனர்.