சேலத்தில் நண்பனின் மனைவியை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்யும் முயற்சியே வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருமலைகிரி பகுதியில் வெள்ளிப்பட்டறை நடத்தி வரும் தங்கராஜிடம் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனாகுமாரி, உறவினர் சன்னிகுமார் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஆகாஷின் நண்பன் வினோத் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் சம்பவத்தன்று குடிபோதையில் வினோத் வந்தனாகுமாரியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும் அப்போது ஏற்பட்ட மோதலில் மூவரும் கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
ஆகாஷுக்கும் வந்தனாகுமாரிக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து வைத்ததே வினோத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.