தமிழக காவல்துறைக்கு சுமார் 100 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட 2 ஆயிரத்து 271 வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.
சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு 1,506 இருச்சக்கர வாகனங்கள், 31 ஸ்கார்ப்பியோ கார்கள், 510 பொலிரோ கார்கள், 50 வேன்கள், 100 சிற்றுந்துகள், 20 பேருந்துகள், 54 லாரிகள் என மொத்தம் 2,271 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில், அவற்றை ஒப்படைக்கும் அடையாளமாக 41 வாகனங்களை முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக விழாவுக்கு தந்த முதலமைச்சருக்கு, உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விசுவநாதன் புத்தகங்களை வழங்கி வரவேற்றனர். விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.