மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ராமாயண சுற்றுலா ரயிலை மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே துவக்கி வைத்தார்.
இந்த ரயில் ராமாயண இதிகாச தலங்களுக்கு செல்வதற்கு திருநெல்வேலியிலிருந்து மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல், சித்ரகுட்தாம்- பக்ஸார் - ரகுநாதபுர சிதமர்ஹி - ஜனக்புரி அயோத்தி - நந்திகிராம் - அலகாபாத் - சிறிங்காவெர்பூர் - நாசிக் - ஹம்பி ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் திருநெல்வேலிக்கு வரும் வகையில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் பயணம் செய்ய நபர் ஒருவருக்கு15ஆயிரத்து 990 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.