விழுப்புரம் கோட்டத்தைச் சேர்ந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய தூரம் செல்லும் 2 ப்ளஸ் 2 இருக்கை கொண்ட சொகுசுப் பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 25ல் இருந்து 15 ரூபாய் ஆகவும், 3 ப்ளஸ் 2 இருக்கை கொண்ட பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் 15 ல் இருந்து 10 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், பயணிகளை கவரும் வகையில் இந்த கட்டண குறைப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும் விழுப்புரம் கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.