கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதலாக தண்ணீரை திறக்க கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை ஆந்திர முதலமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வழங்கினர், இதுதொடர்பான பேச்சுவார்த்தைகாக தமிழக அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் விமானம் மூலமாக விஜயவாடா சென்றடைந்தனர்.
இதையடுத்து, ஜெகன்மோகனை நேரில் சந்தித்து தமிழக அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரிடம் வழங்கப்பட்ட கடிதத்தில், கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் தொடர்பாகவும், கிருஷ்ணா நதியிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 டிஎம்சி தண்ணீரை திறப்பது தொடர்பான கோரிக்கையும் முன் வைக்கப்பட்டிருந்தது.