திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக அதிமுக- திமுக வினரிடையே தள்ளுமுள்ளு உருவானதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஆர்.கே.பேட்டை ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏற்கெனவே இரு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அதிமுக மற்றும் திமுகவினர் தேர்தல் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.
அப்போது, ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் அவர்களுள் யார் முதலில் செல்வது என்பது தொடர்பாக தகராறு உருவானதாக கூறப்படுகிறது. வாய்த் தகராறு முற்றி அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.