நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வரும் 20ம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கும் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
அந்த வகையில், வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் ஆலோசனை நடத்தினார்.
இதில், இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மார்ச் 6ம் தேதி வெளியிடவும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் அறிவிப்பை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.