காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சர்ச்சைக்குரிய வகையில் டிக்டாக் வீடியோ பதிவு செய்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய உரை ஒன்றுக்கு, அக்கட்சியின் இளைஞர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடித்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ, சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், துரைமுருகனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர்.