செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி 35 நாட்களுக்கு பிறகு போலீஸ் கண்காணிப்பின் கீழ் மீண்டும் நேற்றிரவு முதல் செயல்பட தொடங்கியுள்ளது.
கடந்த ஜனவரி 26ம் தேதி நள்ளிரவு அரசு பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, கலவரமாக வெடித்தது.
இதில், ஊழியர்கள் பலர் படுகாயமடைந்ததுடன் சுங்கச்சாவடி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது. இதையடுத்து மூடப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி மீண்டும் செயல்பட தொடங்கியதால், நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் கட்டணம் செலுத்தி செல்கின்றன.
இந்த நிலையில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மீண்டும் சுங்கச்சாவடி செயல்படுவதாக லாரி உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.