ராமநாதபுரம் அருகே கடலாடியில் 500 மெகாவாட் சூரிய மின் சக்தி உற்பத்திக்கான திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
1500 ஏக்கர் நிலத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனல் மின் நிலையம் அமைக்கப்படுவது குறித்து அறிவிப்பை சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடித்து வந்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2017 ம் ஆண்டு தமிழக அரசு கடலாடியில் சூரிய மின்திட்டத்தை அறிவித்தது. ஆனால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்த வித முன்னேற்றமும் இத்திட்டத்தில் ஏற்படாததால் அதனை மத்திய எரிசக்தித்துறை அமைச்சகம் ரத்து செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.