காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பூஜையின் போது, வடகலை மற்றும் தென் கலை பிரிவினர் இடையே மோதல் உருவானால், காவல்துறையிடம் புகார் கொடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவில் செயல் அலுவலருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
காஞ்சிபுரம் ரங்கநாதன் என்பவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி S.M. சுப்பிரமணியம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், முதலில் தென்கலை பிரிவினரையும், அடுத்து, வடகலை பிரிவினரையும் கோவிலில் பிரபந்தம் பாட அனுமதிக்குமாறு யோசனை தெரிவித்தார். இந்த புதிய நடைமுறை வருகிற மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நீதிபதி S.M. சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார்.