போலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. துறையின் கீழ் உள்ள நிறுவனத்தில் எலக்ட்ரோபதி, எலக்ட்ரோ ஹோமியோபதி படிப்பு முடித்து சிகிச்சை அளிக்கும் உரிமையில், தமிழ்நாடு ஹோமியோபதி மருத்துவ கவுன்சில் தலையிட தடைகோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்தப் படிப்புகளை இந்திய மருத்துவத்துறையான ஆயுஷ் அங்கீகரிக்கவில்லை என்றும் அதனை அங்கீகரிக்க மத்திய, மாநில அரசுகள் தனி கவுன்சில் உருவாக்கவில்லை என்றும் கூறி மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்தார். போலி படிப்புகளை கற்பிக்கும் நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.